சினிமா

என் குடும்பமே அவருக்கு ரசிகையாகிட்டோம்! தமிழ் நடிகையை புகழ்ந்து தள்ளிய நடிகை ரகுல் ப்ரீத் சிங்! ஏன்னு தெரியுமா?

Summary:

கடந்த 2019 செப்டம்பர் மாதம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாப

கடந்த 2019 செப்டம்பர் மாதம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற வெப்தொடர் தி ஃபேமிலி மேன்.இத்தொடரை ராஜ் & டி.கே ஆகியோர் இயக்கியிருந்தனர். மேலும் இதில் மனோஜ் பாஜ்பாய், பிரியா மணி ஆகியோர் நடித்திருந்தனர். 

அதன் வெற்றியை தொடர்ந்து தற்போது தி ஃபேமிலி மேன் 2 வெப்தொடர் உருவாகி கடந்த சில தினங்களுக்கு முன்பு அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியானது. இதில் இலங்கைத் தமிழராக ராஜி என்ற கதாபாத்திரத்தில் நடிகை சமந்தா மிகவும் அசத்தலாக நடித்துள்ளார். அந்த வெப் தொடர் ஈழப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளதாக கூறி இதனை ஒளிபரப்பகூடாது என இயக்குனர் பாரதிராஜா, சீமான் போன்றோர் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தனர்.

இது ஒருபுறமிருக்க இந்த தொடருக்கு பாராட்டுகளும் குவிந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் இப்படத்தை கண்ட நடிகை ரகுல் ப்ரீத் சிங்க் தனது டுவிட்டரில், தி பேமிலி மேன்-2 தொடரில் மனோஜ்பாஜ்பாயின் நடிப்பை பாராட்ட வார்த்தைகளே இல்லை. அதேபோல் சமந்தா ராஜி கேரக்டரை மிக அற்புதமாக செய்திருக்கிறார். இந்த தொடரை பார்த்த பிறகு எங்கள் குடும்பமே சமந்தாவின் ரசிகைகளாக மாறி விட்டோம்'  என்று பதிவிட்டுள்ளார்.


Advertisement