சினிமா

ஊரடங்கு! 200 குடும்பங்களுக்கு உணவளித்து வரும் பிரபல இளம்நடிகை!

Summary:

Ragul preeth singh provide food for 200 family

இந்தியாவில் கொரோனா  வைரஸ் பெருமளவில் பரவி வரும் நிலையில், தற்போது கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3, 375 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 79 பேர் உயிரிழந்துள்ளனர் இந்நிலையில் மேலும் கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது, சமூகவிலகலை பின்பற்ற வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.  இந்நிலையில் பல தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் பெருமளவில் அவதிப்படுகின்றனர். அதனைத் தொடர்ந்து பல பிரபலங்களும் உணவு வழங்குவது, முககவசம் வழங்குவது என மக்களுக்கு பல  உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை ரகுல் பிரீத் சிங் குர்கானில் தனது வீட்டிற்கு அருகேயுள்ள ஒரு பகுதியில் வசித்து வரும் 200 ஏழை குடும்பங்களுக்கு உணவு தயாரித்து கொடுத்து வருகிறார். மேலும் ஊரடங்கு எவ்வளவு நாள் நீட்டிக்கபட்டாலும், அதுவரை தான் அவர்களுக்கு உதவ வேண்டும் என ரகுல் ப்ரீத்சிங் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.


Advertisement