13 ஆண்டு காதல்.. ஒரு வழியாக திருமணத்தை முடித்த விஜய் டிவி பிரபல நடிகர்.! குவியும் வாழ்த்துக்கள்!!
நீங்களும் உதவுங்க.. கொரோனா நோயாளிகளுக்காக நடிகை ரகுல் ப்ரீத் சிங் செய்யும் காரியம்! குவியும் வாழ்த்துக்கள்!!
நாடு முழுவதும் கொரோனா பரவல் தற்போது இரண்டாவது அலையாக தீவிரம் எடுத்துள்ளது. நாளொன்றுக்கு லட்சக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் நிரம்பி வழிகின்றனர். மேலும் இதனால் மருத்துவமனைகளில் படுக்கை தட்டுப்பாடு ஆக்ஸிஜன் கட்டுப்பாடு போன்றவை நிலவி வருகிறது.
இந்நிலையில் ஏராளமான திரைப்பிரபலங்கள் பலரும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி அளித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழில் தடையற தாக்க, என்னமோ ஏதோ, தேவ், தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை ரகுல் ப்ரீத் சிங் கொரோனா பாதித்தவர்களுக்கு உதவ நிதி திரட்டி வருகிறார்.
மேலும் கிடைக்கும் நிதியை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆக்சிஜன் மற்றும் உயிர் காக்கும் உபகரணங்களை வாங்க பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மக்களும் தங்களால் முடிந்த உதவியை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. நடிகை ரகுல் பிரீத் சிங்கும் இதற்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.