"ரஜினியுடன் இருக்கும் இந்த சிறுவன் யார் தெரியுமா?!"

"ரஜினியுடன் இருக்கும் இந்த சிறுவன் யார் தெரியுமா?!"


Ragawa Lawrence childhood photos

சூப்பர் ஸ்டார் என்றாலே சின்ன குழந்தைக்கு கூட பிடிக்கும். சிறிய வயதில் இருந்து இப்போது வரை அவருக்கு ரசிகர்களாக இருப்பவர்கள் ஏராளம். தற்போது திரைத்துறையில் உள்ள பிரபலங்கள் கூட சூப்பர் ஸ்டார் ரசிகர்களாக உள்ளனர். 

rajini

அந்தவகையில் தன்னுடைய சின்ன வயதில் இருந்தே சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகராக இருப்பவர் தான் ராகவா லாரன்ஸ். பின்னணி நடனக் கலைஞராக தன் திரை வாழ்க்கையை ஆரம்பித்த ராகவா லாரன்ஸ், தற்போது தன் கடின உழைப்பால் முன்னேறியுள்ளார்.

நடன இயக்குனராகவும், நடிகராகவும், இயக்குனராகவும் பன்முகத் திறமை கொண்டவராக உயர்ந்துள்ள ராகவா லாரன்ஸ் பல ஆதரவற்ற குழந்தைகள், ஏழைகள் மற்றும் மாற்றுத் திறனாளிக் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

rajini

சமீபத்தில் வெளியான "சந்திரமுகி 2" படத்தில் முன்னதாக ரஜினி நடித்த வேட்டையன் கதாப்பாத்திரத்தில் லாரன்ஸ் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது ராகவா லாரன்ஸ் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சிறிய வயதில் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.