சினிமா

போஸ்டருக்கு முத்தம் கொடுத்த ஏழை சிறுவனுக்கு அடித்த அதிர்ஷ்டம்..! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் நடிகர் லாரன்ஸ்..! தீயாய் பரவும் பதிவு..!

Summary:

Ragava lawrence twitter post goes viral

சில வாரங்களுக்கு முன் நடிகர் ராகவா லாரன்ஸ் அறக்கட்டளை மூலம் வழங்கிய உணவினை பெற்றுக்கொண்ட சிறுவன் ஒருவன் நடிகர் ராகவா லாரன்ஸின் புகைப்படத்திற்கு முத்தம் கொடுக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலானது. இதனை பார்த்த ராகவா லாரன்ஸ் இந்த புகைப்படம் தனக்கு மிகப்பெரிய விருது கிடைத்த உணர்வை ஏற்படுத்துவதாக பதிவிட்டிருந்தார்.

அந்த சிறுவன் யார்? எங்கு உள்ளார்? என்று எதுவும் தெரியாமல் இருந்த நிலையில் தனது ரசிகர்மன்றம் மூலம் அந்த சிறுவனை தற்போது கண்டுபிடித்துள்ளார் ராகவா லாரன்ஸ். அந்த சிறுவனின் புகைப்படத்துடன் டிவிட்டர் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ள லாரன்ஸ். அந்த பதிவில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார் .

இந்த சிறுவனை பார்க்கும்போது சிறுவயதில் தன்னை பார்ப்பது போல் இருப்பதாகவும், தானும் இதேபோன்ற கஷ்டமான சூழலில்தான் வளர்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ள அவர், இந்த சிறுவனை நேரில் காண மிகவும் ஆவலாக உள்ளேன் எனவும், அந்த சிறுவனுக்கு ஸ்பெஷலாக ஏதாவது செய்யவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


Advertisement