சினிமா

தீபாவளி விருந்தாக ஓடிடியில் வெளியாகவுள்ள ராகவா லாரன்ஸின் மாஸ் திரைப்படம்! வெளியான அறிவிப்பால் குஷியான ரசிகர்கள்!

Summary:

Ragava lawrence movie released in OTT for deepavali

இந்தியில் நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்ஷய் குமார் மற்றும் கியாரா அத்வானி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லட்சுமி பாம். இத்திரைப்படம் 2011 ஆம் ஆண்டு ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்து வெளிவந்த காஞ்சனா திரைப்படத்தின் ரீமேக் ஆகும்.

இந்த படத்தில் கதாநாயகியாக ராய் லட்சுமி மற்றும் திருநங்கை கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமார் நடித்திருந்தனர். மேலும் அவர்களுடன் தேவதர்ஷினி, ஸ்ரீமன்,  கோவை சரளா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பர். அந்த திரைப்படம்  வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ள லட்சுமி பாம் திரைப்படம்  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் நிலையில்,  தீபாவளி விருந்தாக நவம்பர் 9ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. மேலும் இதுகுறித்த அறிவிப்பை ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 


Advertisement