சினிமா

தனது பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு! வாழ்த்துக்களை தெறிக்கவிடும் ரசிகர்கள்!

Summary:

நடிகர் ராகவா லாரன்ஸ் தனது புதிய படத்திற்கான டைட்டில் குறித்து இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழ்சினிமாவில் நடன கலைஞராக அறிமுகமாகி தனது திறமையாலும், விடாமுயற்சியாலும் நடன இயக்குனராக முன்னேறியவர் ராகவா லாரன்ஸ். இவர் பல முன்னணி நடிகர்களின் மெஹா ஹிட் படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். அதனைத் தொடர்ந்து நடிகராக களமிறங்கிய அவர் தனது திறமையான நடிப்பால் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தையே பெற்றுள்ளார். மேலும் தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டும்  விளங்குகிறார்.

அதுமட்டுமின்றி அவர் ஆதரவற்ற மற்றும் மாற்றுதிறனாளி குழந்தைகளுக்காக ஆசிரமம் தொடங்கி ஏராளமான உதவிகளை செய்து  வருகிறார். இந்நிலையில் இந்தியில் அக்‌ஷய்குமாரை நாயகனாக வைத்து காஞ்சனா படத்தின் முதல்பாகத்தை லட்சுமி பாம்  என்ற பெயரில் ராகவா லாரன்ஸ் இயக்கியுள்ளார். இப்படம் நவம்பர் 9ஆம் தேதி வெளியாக உள்ளது.

அதனைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸ் தற்போது ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.  இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்தநிலையில் இப்படத்திற்கு ருத்ரன் என பெயரிடப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை நடிகர் ராகவா லாரன்ஸ் தனது பிறந்த நாளை முன்னிட்டு இன்று வெளியிட்டுள்ளார். இது வைரலான நிலையில் ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.


Advertisement