"ரிஸ்க் எல்லாம்...." சந்திரமுகி 2 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்... ராதிகா சரத்குமார் வடிவேலுவுடன் வெளியிட்ட வைரல் வீடியோ!radhika-sarathkumar-shares-a-viral-video-from-chandramu

2005 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிரபு நயன்தாரா மற்றும் ஜோதிகா ஆகியோரின் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் சந்திரமுகி. இந்தத் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது  இயக்கிக் கொண்டிருக்கிறார் இயக்குனர் பி வாசு.

இந்தத் திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்த தங்க நாரணாவத் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இவர்களுடன் அனுஷ்கா செட்டி வடிவேலு மற்றும் ராதிகா சரத்குமார் உள்ளிட்டோரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்தத் திரைப்படத்திற்கான படைப்பிடிப்பு தற்போது முன்புறமாக நடைபெற்று வருகிறது.

Chandramukhi 2

இந்நிலையில் இத்திரைப்படத்தின் சஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ராதிகா சரத்குமார் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் அவர் வைகைப்புயல் வடிவேலு உடன் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். வடிவேலுவின் பிரபலமான டயலாக்கை  வடிவேலு பேச அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து இருக்கிறார் ராதிகா.

"ரிஸ்க் எடுப்பதெல்லாம் ரஸ்க் சாப்பிடுற மாதிரி" என்ற வடிவேலு வசனம் பேச அதனை படம் பிடித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் ராதிகா சரத்குமார். தமிழ்நாடு முழுவதுமே ட்ரெண்டிங்கான இந்த டயலாக் தற்போது சமூக வலைதளங்களிலும் ட்ரெண்டிங்காகி இருக்கிறது.