சன் டிவி சீரியலில் இருந்து வெளியேறிய நிலையில், பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இணைந்த நடிகை ராதிகா!!

சன் டிவி சீரியலில் இருந்து வெளியேறிய நிலையில், பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இணைந்த நடிகை ராதிகா!!


radhika in zee tamil dance reality show special guest

தமிழ் சினிமாவில் பல பிரபலங்களுடன் இணைந்து, பல வெற்றி படங்களை கொடுத்தவர் நடிகை ராதிகா சரத்குமார். நடிப்பது மட்டுமின்றி சின்னத்திரை தொடர்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார்.

மேலும் நடிகை ராதிகா கடந்த 5 ஆண்டுகளாக நடித்து ஒளிபரப்பாகி வந்த வாணி ராணி சீரியல் முடிவுற்ற நிலையில், அதனைத் தொடர்ந்து சரித்திர பின்னணி கொண்ட சந்திரகுமாரி என்ற சீரியலில் நடித்து வந்தார். அதுமட்டுமின்றி அந்த தொடரை தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராடான் மீடியா ஒர்க்ஸ் மூலமே தயாரித்தும் வந்தார்.

Radhika

 மேலும் இந்த தொடரில் ராதிகாவுடன் நடிகை பானு, நிரோஜா உமா ரியாஸ்கான் மற்றும் பல முக்கிய நடிகர்களும் நடித்திருந்தனர். மேலும் சந்திரகுமாரி தொடர் பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பானது ஆனால் ஒரு சில காரணங்களால் பல சீரியல்களில் நேரங்கள் அதிரடி மாற்றம் செய்யப்பட்டது.

Radhika

 அதனைத் தொடர்ந்து சந்திரகுமாரி தொடர் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டு மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பப்பட்டது. இதனை தொடர்ந்து நடிகை ராதிகா திடீரென அந்த சீரியலில் இருந்து வெளியேறினார்.

அதனை தொடர்ந்து ராதிகா தற்பொழுது நடிகை சினேகா, சுதா சந்திரன் லைலா ஆகியோர் நடுவர்களாக உள்ள நடன நிகழ்ச்சி ஒன்றின் இறுதிப் போட்டிக்கு முக்கிய விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். மேலும் அதனை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.