அடேங்கப்பா.. வேற லெவல் ஆட்டம்! சிவகுமார் வீட்டில் செம ஹேப்பியாக தீபாவளி கொண்டாடிய நடிகை ராதிகா! வைரல் வீடியோ!!

அடேங்கப்பா.. வேற லெவல் ஆட்டம்! சிவகுமார் வீட்டில் செம ஹேப்பியாக தீபாவளி கொண்டாடிய நடிகை ராதிகா! வைரல் வீடியோ!!


Radhika celebrated deepavali in sivakumar house viral video

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நட்சத்திரமாக வலம் வந்தவர் சிவகுமார். அவரது மகன்கள் சூர்யா மற்றும் கார்த்தி. இருவருமே பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து சினிமாதுறையையே கலக்கி வருகின்றனர். இவர்களுக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமும் உள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கார்த்தி நடிப்பில் உருவான சர்தார் திரைப்படம் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் நடிகர் சிவகுமார் வீட்டில் தீபாவளி பண்டிகை வெகு விமரிசையாக கோலாகலமாக கொண்டாடப்பட்டுள்ளது. அதில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் நடிகர் சிவகுமார் வீட்டில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ராதிகா சரத்குமாரும் கலந்து கொண்டுள்ளார். அங்கு அவர் செம உற்சாகத்துடன் ஆட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோவை அவர் இணையத்தில் வெளியிட்ட நிலையில் அது வைரலாகி வருகிறது.