சினிமா

சன் டீவியில் வருகிறது புது சீரியல்! அட! ஹீரோயின் யார் தெரியுமா? இவங்களா?

Summary:

Raasathi new serial in sun tv

இந்திய அளவில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஓன்று சன் தொலைக்காட்சி. சன் தொலைக்காட்சியின் இந்த மிகப்பெரிய வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருப்பது அதில் ஒளிபரப்பாகும் தொடர்கள்தான். 

இல்லத்தரசிகள் மட்டுமே ஒருகாலத்தில் டிவி தொடர் பார்த்துவந்த நிலையில் இன்று அனைத்து தரப்பு வயதினரும் சீரியல் பார்க்க ஆரம்பித்துவிட்டனர். சன் தொலைக்காட்சியும் மக்களை ஈர்க்கும் விதத்தில் புது புது தொடர்களை ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில் ராசாத்தி என்ற புது சீரியலை ஒளிபரப்ப உள்ளது சன் டிவி.

இதில் ஸ்பெஷல் என்னவென்றால் வெள்ளித்திரையில் பிரபலங்களாக இருக்கும் நாட்டாமை விஜயகுமாரும், நகைச்சுவை நடிகை செந்திலும் இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். மேலும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியல் நடிகை பவானி ரெட்டி இந்த தொடரில் நாயகியாக நடிக்கின்றார்.


Advertisement