சினிமா

பாகுபலி ராணாவுக்கு என்னாச்சு? இப்படி ஆள் அடையாளமே தெரியாம மாறிட்டாரே!! வைரலாகும் புகைப்படம்!!

Summary:

raana latest oldman photo viral

 கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் பெரும் வரவேற்பை பெற்ற படம் பாகுபலி. இந்த படத்தில் வில்லனாக நடித்தவர் ராணா. இவர் இப்படத்தில் தனது உடலை ஏற்றி கட்டுக் கோப்பான உடலமைப்புடன் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தார்.

மேலும் கதாநாயகனாக நடித்த பிரபாசுக்கு சமமாக ராணாவிற்கும் இப்படத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் தற்போது  நடிகர் ராணா வயதான தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.இதனை கண்ட ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

rana க்கான பட முடிவு 
நடிகர் ராணா தற்போது மைனா, தொடரி, கயல் போன்ற படங்களை இயக்கிய பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் வயதான தோற்றத்தில் நடித்து வருகிறார்.
மேலும் இந்த திரைப்படம் ஹிந்தியில் ஹாத்தி மேரே சாத்தி, தமிழில் காடன், தெலுங்கில் அரன்யா என்ற பெயரில் உருவாகி வருகிறது. மேலும் இதன் படப்பிடிப்புமிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 இப்படத்தில் ராணாவுடன், சோயா ஹூசைன் விஷ்ணு விஷால், ரோபோ சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.அந்த படத்தில் இடம்பெற்ற புகைப்படமே தற்போது வைரலாகி வருகிறது


Advertisement