சினிமா

தல அஜித்துக்காக வெறிதனமாக கானா பாடலை பாடிய பூவையார் - உற்சாகத்தில் தல ரசிகர்கள்.

Summary:

Puvaiyar kana song for ajith

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் கப்பீஸ் என்கிற பூவையார். இவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆனால் கானா பாடல் பாடுவதில் வல்லவர்.

மேலும் இவர் தனது பேச்சாலும், பாடல்கள் மூலமும் மக்கள் மனதில் இடம் பிடித்து செல்ல பிள்ளையாக திகழ்ந்தவர். மேலும் சூப்பர் சிங்கர் சீசன் 6 ஜீனியர்களுக்கான போட்டியில் வெற்றி பெற்று மூன்றாம் இடத்தை வென்றுள்ளார்.

சமீபத்தில் கூட விஜய் நடிப்பில் வரவிருக்கும் பிகில் படத்தில் ஒரு பாடலை அருமையாக பாடியுள்ளார். இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறிதனமாக தல அஜித் அவர்களுக்கு ஒரு கானா பாடல் பாடி அசத்தியுள்ளார்.தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.


Advertisement