புஷ்பா படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா?.. டாப்பு டக்கர் குஷியில் படக்குழு..! Pushpa Movie Box Office Collection One Day Amount

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், செம்மர கடத்தலால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பான கதையம்சத்தில் உருவாகியுள்ள திரைப்படம் புஷ்பா. இந்த படம் 2 பாகமாக வெளியிடப்படவுள்ளது. படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசைமையைத்து இருக்கிறார். 

புஷ்பா படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்கியுள்ளது. இப்படம் நாளை டிச. 17,2021 அன்று திரையரங்குகளில் வெளியானது. தமிழ், மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னட மொழிகளில் படம் வெளியாகின.

Pushpa

அல்லு அர்ஜுன், பாசில், ரஷ்மிக்கா மாடானா ஆகியோர் நடிப்பில் படம் உருவாகியுள்ளது. ஆக்சன் திரில்லர் படமாக உருவாகியுள்ள புஷ்பா, ரூ.250 கோடி செலவில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஆண்ட்ரியா பாடிய டப்பிங் பாடல் இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பையும் பெற்றது. அந்த வீடியோ பாடலுக்கு நடிகை நயன்தாரா நடனம் ஆடியிருந்தார்.

இந்நிலையில், புஷ்பா திரைப்படம் முதல் நாளில் ரூ.70 கோடி வசூல் செய்ததாக படக்குழு அறிவித்துள்ளது. 5 மொழிகளில் வெளியான படம், அனைத்து மாநிலத்திலும் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்கில் ஓடி வருவதும் குறிப்பிடத்தக்கது.