இன்னும் 6 நாட்களில் வெளியாகிறது புஷ்பா 2 படத்தின் டீசர்; எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!

இன்னும் 6 நாட்களில் வெளியாகிறது புஷ்பா 2 படத்தின் டீசர்; எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!Pushpa Movie 2 part Teaser Will release on 8 April 2024 

 

சுகுமார் இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் புஷ்பா 2 (Pushpa 2). புஷ்பா படத்தின் தொடர்ச்சியாக, தற்போது அதன் இரண்டாவது பாகம் தயாராகி இருக்கிறது. ஆந்திரா - தமிழக எல்லையில் நடக்கும் செம்மரக்கடத்தல் குறித்த கருவை மையமாக கொண்டு படம் எடுக்கப்பட்டுள்ளது.

புஷ்பா படத்தின் முதல் பாகம் வெற்றியடைந்ததை தொடர்ந்து, இரண்டாவது பாகம் ஆகஸ்ட் 15, 2024 அன்று திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான பணிகள் விறுவிறுப்புடன் நடைபெறுகின்றன. சஸ்பென்ஸ் காட்சிகளுடன் கடந்த ஆண்டு முன்னோட்ட வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது.

tamil cinema

படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில், ராவ் ரமேஷ் உட்பட பலரும் நடித்திருந்தனர். இந்நிலையில், புஷ்பா படத்தின் அசத்தல் டீசர் காட்சிகள், வரும் ஏப்ரல் மாதம் 08ம் தேதி வெளியிடப்படும் என படக்குழு சார்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அல்லு அர்ஜுன் மற்றும் புஷ்பா பட ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.