புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் ரிலீஸ் எப்போது??.. ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!Pushpa 2 The Rule Movie Will Release on 15 Aug 2024

 

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில், சுகுமார் இயக்கத்தில் வெளியான புஷ்பா திரைப்படம் ஏகபோக வரவேற்பை பெற்றது. கடந்த 2021ம் ஆண்டு வெளியான இப்படம் ஏகபோக வரவேற்பை பெற்றது.  

அதனைத்தொடர்ந்து, தற்போது நடிகர்கள் அல்லு அர்ஜுன், பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா, ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், சுனில், ராவ் ரமேஷ் உட்பட பலர் நடித்து புஷ்பா படத்தின் 2ம் பாகம் உருவாகி வருகிறது. 
 

ரூ.500 கோடி செலவில் தயாராகும் திரைப்படம், 2024 பாக்ஸ் ஆபிசில் பட்டையை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம் உட்பட பல மொழிகளில் வெளியாகிறது. இந்நிலையில், படம் வரும் 15 ஆகஸ்ட் 2024 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.