#BigBreaking: டெல்லி செங்கோட்டை வன்முறையில் சிக்கிய பிரபல நடிகர் சாலை விபத்தில் மரணம்..!

#BigBreaking: டெல்லி செங்கோட்டை வன்முறையில் சிக்கிய பிரபல நடிகர் சாலை விபத்தில் மரணம்..!



punjab-actor-deep-sidhu-accused-in-delhi-red-fort-viole

பஞ்சாபி மொழி நடிகராக இருந்து வந்த தீப் சித்து சாலை விபத்தில் மரணமடைந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த திரைப்பட நடிகர் தீப் சித்து. இவர் கடந்த 2021 ஆம் வருடம் நடந்த விவசாயிகள் போராட்டத்தின் போது, டெல்லி செங்கோட்டை வன்முறை விவகாரத்தில் சிக்கி இருந்தார். அவருக்கு தற்போது 37 வயது ஆகிறது.

இந்த நிலையில், இன்று இவர் ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபெட் காவல் நிலைய எல்லைப்பகுதியில் சென்றுகொண்டு இருக்கையில், விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.