குக் வித் கோமாளி’ முடிந்தால் என்ன.? இனி தான் அது இருக்கே.! கெத்து காட்டும் புகழ்.!

குக் வித் கோமாளி’ முடிந்தால் என்ன.? இனி தான் அது இருக்கே.! கெத்து காட்டும் புகழ்.!


pugazh youtube channel

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டதன் மூலம் தனது ரகளையாலும், சேட்டையாலும் ஏராளமான ரசிகர்களின் மனதை கவர்ந்து பெருமளவில் பிரபலமானவர் புகழ். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு புகழுக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உருவானது.

மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொடர்ந்து புகழுக்கு ஏராளமான பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. புகழ் தல அஜித்தின் வலிமை படத்தில் நடித்து வருகிறார் என கூறப்படுகிறது. மேலும் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்திலும், சந்தானம் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதுமட்டுமின்றி தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Cook with komali

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாம் சீசன் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்தநிலையில், குக் வித் கோமாளி’ முடிந்தால் என்ன.? ‘பரட்டை புகழ்’ சேனல் இருக்கே என்று சொல்லும் அளவிற்கு தனிப்பட்ட யூடியூப் சேனலில் புகழின் அட்ராசிட்டிகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. "பரட்டை புகழ்" யூடியூப் சேனலில் உள்ள வீடியோக்களுக்கு ஏராளமான பார்வையாளர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.