இதான் வாழ்க்கை புரிஞ்சுக்கோ!! மாட்டிடம் பேச்சுவார்த்தை நடத்திய குக் வித் கோமாளி புகழ்! வைரலாகும் வீடியோ!!pugal talk with cow video viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, பார்ப்போரை  வயிறு குலுங்க சிரிக்க வைத்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுவரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதன் முதல் சீசனில் வனிதா விஜயகுமார், ரம்யா பாண்டியன், உமா ரியாஸ் உள்ளிட்ட பலரும் போட்டியாளர்களாக கலந்து கொண்ட நிலையில் வனிதா வெற்றி பெற்றார். |

இந்த நிலையில் முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, தற்போது குக் வித் கோமாளி சீசன் 2 ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கோமாளிகளான புகழ், ஷிவாங்கி,மணிமேகலை, சுனிதா, சரத் செய்யும் ரகளைகள் ஏராளம். மேலும் இதனை கண்டு ரசிகர்கள் வயிறு குலுங்க சிரிக்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் புகழ். அவருக்கு தற்போது படவாய்ப்புகள் குவிந்து வருகிறது. மேலும் பெண் போட்டியாளர்களிடம் இவர் செய்யும் சேட்டைகள் ஏராளம். இந்த நிலையில் புகழ் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மாட்டிடம் பேசுவது போன்றும், அதற்கு அட்வைஸ் செய்வது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.