புதுப்பேட்டை 2 படத்தின் அசத்தல் அப்டேட் கொடுத்த செல்வராகவன்; விபரம் இதோ.!



Pudhupettai 2 Movie Update 

 

கடந்த 2006ம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில், நடிகர்கள் தனுஷ், சினேகா, சோனியா அகர்வால், விஜய் சேதுபதி, நிதிஷ் வீரா உட்பட பலர் நடித்து வெளியான திரைப்படம் புதுப்பேட்டை. 

ரவுடியிசம் தொடர்பான கதையின் அதிரடி காட்சிகள், இன்று வரை அப்படத்தை காண்போரை மெய்சிலிர்க்க வைத்து இருந்தது. படம் வெளியாகி 20 ஆண்டுகள் கடந்துவிட்டன. 

இந்நிலையில், படத்தின் இரண்டாவது பாகம் கேட்டு ரசிகர்கள் தொந்தரவு செய்து வந்த நிலையில், இந்த ஆண்டு புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான அறிவிப்பை செல்வராகவனும் உறுதி செய்துள்ளார். 

செல்வாவின் இயக்கத்தில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் கேட்டும் ரசிகர்கள் கோரிக்கை முன்வைத்து வருகின்றனர்.