விஜய் சேதுபதியால் பிரபல நடிகர்களுக்கு வந்த சோதனை!. திணறிய படக்குழு!.  problem in releasing movie on october 5

தமிழ் திரையுலகில் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து தற்போது  முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் விஜய் சேதுபதி. 

தனது தீராத முயற்சியாலும், எளிமையான குணத்தாலும் சிறிது காலத்திலேயே முன்னேறிய இவருக்கென ஏராளமான  ரசிகர் பட்டாளம் உள்ளது.இவருக்கு அடுத்தாக 96 படம் வெளிவர இருக்கிறது.

இந்நிலையில் தெலுங்கில் அர்ஜூன் ரெட்டி மற்றும் கீதா கோவிந்தம் படம் மூலம் தமிழ்நாட்டு ரசிகர்கள் மனதிலும் இடம்பிடித்தவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. தற்போது அவர் தமிழில் நோட்டா என்ற படம் மூலம் அறிமுகமாகிறார்.

96, நோட்டா இரண்டு திரைப்படமும் வரும் அக்டோபர் 5 ல் திரைக்கு வரவிருக்கிறது.
இந்நிலையில் மேலும் இதே தேதியில்  சமுத்திரக்கனியின் ஆண்தேவதை,விஷ்ணுவிஷால் நடித்துள்ள ராட்சசன், ஜெய் நடித்துள்ள ஜருகண்டி,  விவேக்கின் எழுமின்,உதயா நடித்துள்ள உத்தரவு மகாராஜா ஆகிய படங்களும் வெளியாகிறது.

மேலும்  96, நோட்டா ஆகிய இரண்டு படங்களும் எதிர்பார்ப்பில் உள்ள  பெரிய நடிகர்களின் படங்கள் என்பதால் அதிக தியேட்டர்களை பிடித்து விடும். ஆனால்  மற்ற படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது. 

மேலும் சில படங்கள் தள்ளி போகும் நிலையும் உருவாகியுள்ளதால் இந்த படக்குழுவினர் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.