சினிமா

பிரியங்கா சோப்ராவின் அதிரடி முடிவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! என்ன விஷயம் தெரியுமா?

Summary:

Priyanka chopra nik jones divorce news in tamil

தளபதி விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. தமிழன் படத்தை அடுத்து பாலிவுட் பக்கம் சென்ற பிரியங்கா ஹிந்தி சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக மாறினார். அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்ற பெருமையும் இவருக்கு கிடைத்தது. மேலும், ஹாலிவுட் சினிமாவில் பிரியங்கா புகழ்பெற்றார்.

இந்நிலையில் பிரபல அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை பிரியங்கா காதலித்தார். நிக் ஜோன்ஸ் ப்ரியங்காவைவிட 10 வயதுக்கும் குறைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர்கள் இருவரது திருமணமும் உலகமே வியக்கும் வகையில் பிரமாண்டமாக நடைபெற்றது.

திருமணம் முடிந்து பிரியங்கா கர்ப்பமாக இருப்பதாகவும் சில நாட்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகியது. தற்போது இருவரும் ஜாலி ட்ரிப் சென்றுள்ள நிலையில் திருமணம் முடிந்து 117 நாட்களில் பிரியங்கா நிக் ஜோன்ஸ் இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதற்காக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement