தமிழகம் சினிமா

தொகுப்பாளினி பிரியங்கா மருத்துவமனையில் அனுமதி.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

Summary:

விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருப்பவர் பிரியங்கா. ஒவ்வொரு தொகுப்பாளர்கள் தங்கள் ஸ்டைலில்

விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருப்பவர் பிரியங்கா. ஒவ்வொரு தொகுப்பாளர்கள் தங்கள் ஸ்டைலில் நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். அந்த வகையில் தொகுப்பாளனி ப்ரியங்கா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கம் ஸ்டைலுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. 

பிரியங்கா விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி, சூப்பர் சிங்கர், கலக்கப்போவது யாரு போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுப்பாளினியாகியாக தொகுத்து வழங்கி இருக்கிறார். அதோடு கலக்கபோவது யாரு நிகழ்ச்சியில் இவர் நடுவராகவும் பங்கு பெற்று வருகிறார். மேலும், இவரின் சிரிப்புக்கு என்றே ரசிகர்கர்கள் படை உள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒவ்வரு தொகுப்பாளருக்கும் மாற்று நபர்கள் உள்ளனர். ஆனால் பிரியங்காவின் இடத்தை நிரப்புவதற்கு மாற்று நபரே இல்லை அவருக்கு நிகர் அவரே என பிளாக்ஷீப் அவார்ட் நிகழ்ச்சியில் விஜய் டிவியின் முக்கிய அதிகாரி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நகைச்சுவையாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மனதை கவர்ந்த பிரியங்கா தற்போது தீடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை அவரே தனது யூடுயூப் தளத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார். அதில் தனக்கு புட் பாய்சன் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக கூறியுள்ளார். 


Advertisement