கையில் குழந்தையுடன் சுற்றும் தொகுப்பாளினி பிரியங்கா.! அட.. அந்த பாப்பாவா இது! நல்லா வளந்துட்டாங்களே!!

கையில் குழந்தையுடன் சுற்றும் தொகுப்பாளினி பிரியங்கா.! அட.. அந்த பாப்பாவா இது! நல்லா வளந்துட்டாங்களே!!


Priyanga with her niece latest photo viral

விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பெரும் பிரபலமாக இருப்பவர் பிரியங்கா. அவர் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் அவர் விருது விழாக்கள், இசை வெளியீட்டு விழா போன்றவற்றையும் தொகுத்து வழங்குகிறார்.

பிரியங்கா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சியின் இறுதிவரை சென்றார். யார் எவ்வளவு கிண்டல் செய்தாலும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும் தொகுப்பாளினி பிரியங்காவிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் டெக்னீசியனாக பணியாற்றி வந்த பிரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் எந்த நிகழ்ச்சியிலும் ப்ரியங்கா தனது கணவர் குறித்து பெருமளவில் பேசியதில்லை. அவர் எப்பொழுதுமே தனது அம்மா மற்றும் தம்பி குறித்தே அதிகம் பகிர்வார்.

பிரியங்காவின் தம்பி ரோகித். அவருக்கு கடந்த ஆண்டு இஹா என்ற பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை மீது பிரியங்கா அளவற்ற அன்பு கொண்டுள்ளார். அவ்வப்போது குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்வார். தற்போது குழந்தைக்கு ஒரு வயதாகியுள்ளது. இந்நிலையில் அவர் குழந்தையுடன் ஷாப்பிங் சென்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.