சினிமா

தனது அப்பாவுடன் சமத்து பெண்ணாக, செம கியூட்டாக உட்கார்ந்திருக்கும் தொகுப்பாளினி பிரியங்கா! தீயாய் பரவும் அழகிய புகைப்படம்!!

Summary:

தனது அப்பாவுடன் சமத்து பெண்ணாக, செம கியூட்டாக உட்கார்ந்திருக்கும் தொகுப்பாளினி பிரியங்கா! தீயாய் பரவும் அழகிய புகைப்படம்!!

விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் பெருமளவில் பிரபலமானவர் தொகுப்பாளினி பிரியங்கா. சிரித்த முகத்துடன் மிகவும் கலகலப்பாக இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளுக்கு அமோக வரவேற்பு உள்ளது. மேலும் இவருக்கெனவே ஏராளமான  ரசிகர்கள் உள்ளனர்.

பிரியங்கா பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அங்கு தனது சில செயல்களால், கோபத்தால் அவர் ரசிகர்களிடம் நெகட்டிவான விமர்சனங்களை சந்தித்தார். ஆனாலும் பிரியங்கா டாஸ்க்குகளை சிறப்பாக செய்து நிகழ்ச்சியின் இறுதிவரை சென்று இரண்டாவது இடத்தை பிடித்தார். பிறகு அவர் தற்போது மாகாபாவுடன் இணைந்து சூப்பர் சிங்கர் ஜூனியர், ராஜுவுடன் இணைந்து பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

பிரியங்கா பிக்பாஸ் வீட்டில் டாஸ்க் ஒன்றில் பேசியபோது எனக்கு எனது அப்பாவை மிகவும் பிடிக்கும். ஆனால் எனது சிறு வயதிலேயே அவர் இறந்துவிட்டார் என கண்ணீருடன் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் தற்போது பிரியங்கா அவரது தந்தையுடன் இருக்கும் புகைப்படம் என ஒன்று இணையத்தில் வெளியாகி பெருமளவில் வைரலாகி வருகிறது.

 


Advertisement