சினிமா

கர்ப்பமாகாமலே குழந்தைக்கு தாயான நடிகை பிரியங்கா சோப்ரா! மகிழ்ச்சியாக அவரே பகிர்ந்த சூப்பர் தகவல்!!

Summary:

கர்ப்பமாகாலே குழந்தைக்கு தாயான நடிகை பிரியங்கா சோப்ரா! மகிழ்ச்சியாக அவரே பகிர்ந்த சூப்பர் தகவல்!!

தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த தமிழன் படத்தில் நடித்ததன் மூலம் ரசிர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் பிரியங்கா சோப்ரா. இவர் 2000-ம் ஆண்டு உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அதனைத் தொடர்ந்து அவர் பாலிவுட்டில் களமிறங்கி எக்கச்சக்கமான சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

மேலும் அவர் தற்போது பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாகவும், இந்திய அளவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாகவும் வலம் வருகிறார். அவர் கடந்த 2018 ஆம் ஆண்டு பாடகர் நிக் ஜோனசை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் பிரியங்கா சோப்ரா தற்போது வாடகை தாய் மூலம் முதல் குழந்தைக்கு தாயாகியுள்ளார்.

இந்த தகவலை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நாங்கள் வாடகைத் தாய் மூலம் ஒரு குழந்தையை வரவேற்றோம் என்பதை உறுதிப்படுத்துவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இந்த சிறப்பான நேரத்தில் நாங்கள் எங்களது குடும்பம் குறித்து கவனம் செலுத்துவதால் தனி சுதந்திரத்தை விரும்புகிறோம் என கூறியுள்ளார்.


Advertisement