தன் குடும்பத்தின் முதல் வாரிசு! குழந்தையை கையில் ஏந்தியபடி பிரியங்கா வெளியிட்ட கியூட் புகைப்படம்!!

தன் குடும்பத்தின் முதல் வாரிசு! குழந்தையை கையில் ஏந்தியபடி பிரியங்கா வெளியிட்ட கியூட் புகைப்படம்!!


priyanga-brothers-daughter-photo-viral

விஜய் தொலைக்காட்சியில் எக்கச்சக்கமான நிகழ்ச்சிகளை மிகவும் கலகலப்பாக தொகுத்து வழங்கியதன் மூலம் ரசிகர்களை கவர்ந்து பிரபல தொகுப்பாளினிகளில் ஒருவராக இருப்பவர் நடிகை பிரியங்கா. அவர்
மாகாபாவுடன் இணைந்து மிகவும் காமெடியாக, பார்ப்போர் ரசிக்கும் வகையில் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் அனைத்தும் செம ஹிட்.

இதற்கிடையில் பிரியங்கா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்துகொண்டார். அங்கு அவர் தனது சில செயல்களால், கோபத்தால் ரசிகர்களின் விமர்சனத்திற்கு ஆளானார். ஆனாலும் அவர் நிகழ்ச்சியின் இறுதி வரை சென்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார். அவர் தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர், பிக்பாஸ் ஜோடிகள் உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

பிரியங்கா சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். சமீபத்தில் அவர் தனது தம்பி ரோஹித்தின் மனைவியின் வளைகாப்பு புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். இந்நிலையில் தற்போது அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. பிரியங்கா அத்தையாகியுள்ளார்.அந்த குழந்தையை கையில் ஏந்தியபடி எடுத்த புகைப்படத்தை பிரியங்கா மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.