பருத்திவீரன் திரைப்படத்தில் விருப்பமில்லாமல் நடித்த பிரியாமணி.. என்ன காரணம் தெரியுமா.?

பருத்திவீரன் திரைப்படத்தில் விருப்பமில்லாமல் நடித்த பிரியாமணி.. என்ன காரணம் தெரியுமா.?


Priyamani openup about her movie experience

இயக்குனர் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை என்ற பெருமையைப் பெற்ற நடிகை பிரியா மணி. இவர் பாரதிராஜாவின் "கண்களால் கைது செய்" படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

Priyamani

இயக்குனரான பாரதிராஜாவை முதன் முதலில் ப்ரியாமணி பார்க்க வந்தபோது, ​​பெரிய இயக்குனரைப் பார்க்க வந்திருக்கிறோம் என்ற பயமில்லாமல், மிகவும் யதார்த்தமாக இருந்ததாலேயே பாரதிராஜா இவரை தன் படத்தில் நடிக்க வைத்தாராம்.

தொடர்ந்து அமீர் இயக்கத்தில் இவர் நடித்த "பருத்தி வீரன்" திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அந்தப்படத்தின் படப்பிடிப்பில், ப்ரியாமணிக்கும், அமீருக்கும் அடிக்கடி சண்டை நடக்குமாம். கிராமத்தில் படப்பிடிப்பு நடந்ததால், பிரியாமணி அமீரின் மேல் கடுப்பில் இருந்ததாக தெரிகிறது.

Priyamani

பருத்திவீரன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அனைவரையும் மிரளவைத்தது எனலாம். அந்த காட்சிக்காகத் தான் ப்ரியாமணிக்கு தேசிய விருது கிடைத்தது. ஆனால் அந்தக் காட்சி படப்பிடிப்பின்போது பிரியாமணி படத்தின் இறுதிக் காட்சி குறித்து "இப்பயெல்லாம் காட்சி இருக்குமென்று ஏன் சொல்லவில்லை" என்று கோபித்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பருத்திவீரன் படம் விருப்பமில்லாமல் தான் நடித்து முடித்தாராம்.