சினிமா

என் கணவருக்கு ஓகேனா பண்ணிக்கலாம்! ரசிகரின் அந்த கேள்விக்கு அதிரடி பதிலளித்த நடிகை ப்ரியாமணி!!

Summary:

தமிழ் சினிமாவில் 2004 ஆம் ஆண்டு கண்களால் கைது செய் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன்

தமிழ் சினிமாவில் 2004 ஆம் ஆண்டு கண்களால் கைது செய் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரியாமணி. இப்படத்தை தொடர்ந்து பிரியாமணி அது ஒரு கனாகாலம், பருத்திவீரன், மலைக்கோட்டை, தோட்டா, நினைத்தாலே இனிக்கும், ராவணன், சாருலதா என தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அதிலும் பருத்திவீரன் திரைப்படம் இவரை ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமடைய செய்தது. மேலும் அவரது சினிமா வாழ்க்கையிலும் அப்படம் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்து பிஸியாக இருந்த பிரியாமணி
கடந்த 2017 ஆம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 

தற்போது சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் பிரியாமணி அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவார். இந்நிலையில் ரசிகர் ஒருவர், அவரிடம் என்னை திருமணம் செய்து கொள்கிறீர்களா? என்று கேட்டுள்ளார். அதற்கு ப்ரியாமணி 
எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை.  ஆனால் என் கணவரிடம் அனுமதி கேளுங்க. அவர் சம்மதம் தெரிவித்தால் நான் உங்களை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூலாக கூறியுள்ளார்


Advertisement