சினிமா

இரண்டு பேருமே என் காதலர்கள் இல்லை! இதெல்லாம் சாதாரணம்! தீயாய் பரவிய தகவல்! உண்மையை உடைத்த நடிகை பிரியா ஆனந்த்!

Summary:

Priya anand talk about love with young heroes

தமிழ் சினிமாவில் 2009 ஆம் ஆண்டு வெளியான வாமனன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் ப்ரியா ஆனந்த். அதனைத் தொடர்ந்து அவர் 180, எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, அரிமா நம்பி, இரும்பு குதிரை, வை ராஜா வை, முத்துராமலிங்கம், இறுதியாக ஆதித்ய வர்மா ஆகிய படத்தில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,  மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் முன்னணி நடிகையாக வலம்வர தீவிரமாக போராடி வருகிறார்

இந்த நிலையில் ப்ரியா ஆனந்திற்கும், நடிகர் அதர்வாவிற்கும் காதல் எனவும், இருவரும் நெருங்கி பழகி வருகிறார்கள் எனவும் தகவல்கள் பரவியது. பின்னர் அவரும்,   கௌதம் கார்த்திக் இருவரும் காதலிப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.

இந்தநிலையில் இதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகை பிரியா ஆனந்திடம் கேட்கப்பட்டது. அப்பொழுது அவர், சினிமாவில் இதுபோன்ற வதந்திகளை கிளப்பி விடுவது சாதாரணம். அதர்வா,  கௌதம் இருவரும் எனது நல்ல நண்பர்களே. காதலர்கள் இல்லை. நான் நன்றாக இருக்க வேண்டுமென நண்பர்கள் என்ற  முறையில் இருவரும் விரும்புகிறார்கள். அதேபோல எனது நண்பர்கள் நன்றாக இருக்க வேண்டுமென நானும்  விரும்புகிறேன் என பிரியா ஆனந்த் கூறியுள்ளார்


Advertisement