சினிமா

வாவ்! வச்ச கண்ணு எடுக்காமல் பார்க்க வைக்கும் ப்ரியா ஆனந்த்! தேவதையாய் ஜொலிக்கும் அழகிய புகைப்படங்கள் இதோ!

Summary:

priya anand latest photo viral

தமிழ் சினிமாவில் நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான வாமணன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியா ஆனந்த். அதனை தொடர்ந்து இவர் 180, எதிர் நீச்சல், அரிமா நம்பி, இரும்பு குதிரை, போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழ் சினிமாவில் நீண்ட காலம் இருந்தாலும் எந்த படமும் சரியாக கைகொடுக்காத நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான எதிர்நீச்சல் படம் ப்ரியா ஆனந்திற்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

அதனை தொடர்ந்து அவர் வணக்கம் சென்னை திரைப்படத்தில் நடித்தார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார்.மேலும் சமீபத்தில் இவர் நடிப்பில் ஆர்.ஜே பாலாஜியுடன் இணைந்து நடித்த LKG படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் தற்போது மீண்டும் பிரியா ஆனந்த் வணக்கம் சென்னை பார்ட் 2வாக உருவாகி வரும் சுமோ திரைப்படத்தில் மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் படவாய்ப்புக்காக அவர் அவ்வப்போது போட்டோசூட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிடுவது வழக்கமாக வைத்திருந்தார். இந்நிலையில் அவர் தற்போது வேல்ஸ் நிறுவனத்தின் வெற்றிவிழாவிற்கு சேலையில் அழகிய தேவதையாக கலந்துகொண்டுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Advertisement