சினிமா

கொரோனோவால் பாதிக்கப்பட்ட நடிகர் ப்ரித்விராஜின் தற்போதைய நிலை! மருத்துவ அறிக்கையுடன் அவரே வெளியிட்ட தகவல்!

Summary:

நடிகர் பிரித்விராஜ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில், தற்போது அவருக்கு பரிசோதனையில் நெகட்டிவ் என வந்துள்ளது.

நடிகர் பிரித்விராஜ் கொரோனா நோய்தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது அதிலிருந்து மீண்டுள்ளதாக தகவல் வெளியிட்டு  ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளார். 

தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருப்பவர் பிரித்விராஜ். இவர் தற்போது டிஜோ  ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் உருவாகிவரும் ஜன கண மண என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக கேரளா கொச்சியில் நடைபெற்று வந்தது. 

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பில் கொரோனா பரிசோதனை நடைபெற்றுள்ளது. அதில் நடிகர் பிரித்விராஜ்க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்த பிரித்விராஜ் இது குறித்து தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து அவர் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில், ஆன்டிஜென் பரிசோதனையில் கொரோனா நெகட்டிவ் என வந்துள்ளது எனக் கூறியுள்ளார். மேலும்  ஒரு வாரம் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறவுள்ளதாகவும், மேலும் தனக்காக பிரார்த்தனை செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் எனவும் கூறியுள்ளார்.


Advertisement