ஊருக்கு திரும்ப வேண்டும்! 57 பேருடன் பாலைவனத்தில் சிக்கி தவிக்கும் நடிகர் பிருத்விராஜ்!!

ஊருக்கு திரும்ப வேண்டும்! 57 பேருடன் பாலைவனத்தில் சிக்கி தவிக்கும் நடிகர் பிருத்விராஜ்!!


Prithviraj sruggled in jordan dessert

தமிழ் சினிமாவில் மொழி, கனா கண்டேன், சத்தம் போடாதே, வெள்ளித்திரை, நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் பிருத்விராஜ். இவர் ஏராளமான மலையாள சினிமாவில் நடித்து முன்னணி நடிகராக உள்ளார். 

இந்நிலையில் பிரித்விராஜ் தற்போது ஆடு ஜீவிதம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஜோர்டானில் உள்ள வாடிரம் பாலைவனப் பகுதியில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் பிருத்விராஜ்  உட்பட 57 பேர் கொண்ட குழு ஜோர்டான் பகுதிக்கு சென்று தற்போது கொரோனா ஊரடங்கால் ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகிறது.

Prithviraj

 இந்நிலையில் நடிகர் பிருத்விராஜ் தனது சமூகவலைதளப் பக்கத்தில்,  மார்ச் 27ஆம் தேதி எங்களது படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ஆனால் தொடர்ந்து நாங்கள் பாலைவனத்திலே தங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எங்களது குழு மருத்துவர்கள் மற்றும் ஜோர்டான் மருத்துவர்கள் 72 மணி நேரத்திற்கு ஒரு முறை எங்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்கின்றனர்.

 ஊருக்கு திரும்புவதே தற்போது எங்களது விருப்பமாக உள்ளது. ஆனால்  உலகம்  இருக்கும்நிலையில் எங்களை மீட்பது அதிகாரிகளின் கவலையாக இருக்காது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. வாய்ப்பு அமையும்போது ஊருக்கு வருவோம். அனைவரும் மிகவும் பாதுகாப்பாக இருங்கள். வாழ்க்கை விரைவில் சகஜ நிலைக்கு திரும்பும் என கூறியுள்ளார்.  இந்நிலையில் இது தொடர்பாக கேரள பிலிம்சேம்பர் முதல்வருக்கு தகவல் தெரிவித்து பிரித்விராஜ் உட்பட 58 பேரையும் அழைத்துவர ஏற்பாடு செய்யும்படி வலியுறுத்தியுள்ளது.