தமிழகம் சினிமா

"என்னாலேயே தாங்க முடியல!" சொப்பன சுந்தரி குறித்து புலம்பும் நடிகர் பிரசண்ணா

Summary:

Prasana replies about soppa sundai

சன் டீவியில் முழுக்க முழுக்க குடும்பம் சம்மந்தமான நிகழ்ச்சிகளை மட்டுமே வழங்கிவந்த சன் நிறுவனம் தற்போது கவர்ச்சியை கையில் எடுத்துள்ளது. தனது நிறுவனத்தில் உள்ள சன் லைப் என்ற சேனலை தேர்வு செய்து அதனை புதுப்பித்துள்ளது. ஒரு காலத்தில் பழைய பாடல்கள், படங்கள் என பழமாக இருந்த சன் லைப் தற்போது ஆடல், பாடல், கவர்ச்சி என பளபளக்க தொடகியுள்ளது.

குறிப்பாக சொப்பன சுந்தரி நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் எல்லை மீறிய கவர்ச்சியில் இருப்பது ரசிகர்களையும் நெட்டிசன்களையும் விமர்சிக்க வைத்துள்ளது. மாடலிங் அழகிகள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் கவர்ச்சிக்கு பஞ்சம் இருந்ததில்லை. போட்டியாளர்களும் கொஞ்சமும் தயக்கம் இல்லாமல் உச்சகட்ட அளவில் தங்களை கவர்ச்சியான பெண்ணாக முன் நிறுத்தினர்.

இந்த நிகழ்ச்சியை நடிகர் பிரசண்ணா தொகுத்து வழங்கினார். தினமும் இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பான இந்த நிகழ்ச்சியை குடும்பத்தோடு நிச்சயம் பார்க்க முடியாது. சன் குழுமத்தின் மீது மக்கள் கொண்டிருந்த நன்மதிப்பும் இதனால் குறைந்துள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் பிரசன்னா மீதும் பலர் அதிருப்தியில் உள்ளனர்.

இதுகுறித்து நடிகர் பிரசண்ணாவின் ரசிகர் ஒருவர் டுவிட்டரில், "பிரசன்னா தோழரே உங்கள் மீதான மதிப்பீடுகள் தரம் தாழ்கிறது. உணர முயற்சியுங்கள். மற்றபடி உங்கள் சம்பாதியத்தில் தலையிடும் உரிமை எனக்கில்லை. ஆனால் எங்க வீட்ல இருக்குற டிவில நீங்க வர்றதை நான் விரும்பல மதிப்பிற்குரிய பிரசண்ணா" என பதிவிட்டுள்ளார். 

இதற்கு பதிலளித்துள்ள நடிகர் பிரசன்னா, "இவ்வாறு நடந்துகொண்டதிற்கு என்னால் இப்போது மன்னிப்பு மட்டுமே உங்களிடம் கேட்க முடியும். இந்த நிகழ்ச்சியால் நான் மிக தர்ம சங்கடத்திற்கு ஆளானேன் என்பதனை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். தொழில் ரீதியாக ஒப்பந்தமாகிய என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. என்னால் முடிந்த வரை இந்த நிகழ்ச்சியை ஒழுக்கமாக நடத்த தான் முயற்சி செய்தேன். இதில் என்னுடைய உருவாக்கம் என்று எதுவுமில்லை; நானே ஒரு கட்டுப்பாட்டுக்குள் தான் இயங்கினேன்" என பதிலளித்துள்ளார். 


Advertisement