சினிமா

டிஸ்கவரி சேனலில் புதிய அவதாரம் எடுக்கும் நடிகர் பிரகாஷ்ராஜ்! பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

Summary:

Prakashraj joined with discovery channel

ஹிந்தி, தமிழ்,  மலையாளம், கன்னடம், பெங்காலி, தெலுங்கு, மராத்தி மற்றும் ஆங்கிலம் என பல மொழிகளில் இயங்கி வரும் டிஸ்கவரி சேனல் மிகவும் பிரபலமானது. இதில் வரும் நிகழ்ச்சிகள் அனைத்தும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த சேனலில் ஒளிபரப்பான இன் தி வைல்ட் வித் பியர் கிரில்ஸ் என்ற நிகழ்ச்சியில் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பங்கேற்றார். காடு, மலை, விலங்குகளுடன் இவர் செய்த சாகசங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது . இந்நிலையில் அவரைத் தொடர்ந்து நடிகர் பிரகாஷ்ராஜ் தற்போது டிஸ்கவரி சேனலில் தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ஒன்றிற்கு வர்ணனையாளராக மாறியுள்ளார்.

ஜூன் 5 முதல் 8 மணிக்கு வைல்ட் கர்நாடகா என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது. ஒரே நிலத்தில் இணைந்து வாழும் விலங்குகளின் வாழ்க்கையை பற்றிய இந்த நிகழ்ச்சியில் பிரகாஷ்ராஜ் வர்ணனையாளராக உள்ளார். 

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இது ஒரு அர்த்தமுள்ள பயணம் நான் இயற்கையின் குரலாக மாறப் போகிறேன். இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் சிரமப்பட்டு ஆவண படங்களை உருவாக்கியுள்ளனர் அதற்கு நான் குரல் கொடுத்துள்ளேன் என பதிவிட்டுள்ளார்.


Advertisement