சூப்பர் ஸ்டார் பாணியில் அறிவிப்பை வெளியிட்டுள்ள பிரகாஷ்ராஜ்! என்ன சொன்னார் தெரியுமா?Prakashraj anounced about politics entry

தமிழ் சினிமாவில் தனக்கென மிகப்பெரிய இடத்தை வைத்துள்ளவர் நடிகர் பிரகாஷ்ராஜ். ஹீரோ, வில்லன், குணசித்ர நடிகர் என பலகோணங்களில் நடித்துள்ளார் பிரகாஷ்ராஜ். இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார் பிரகாஷ்ராஜ் அவர்கள்.

சினிமாவில் தனக்கென மாபெரும் ரசிகர் கூட்டத்தை வைத்துள்ள பிரகாஷ்ராஜ் சில காலமாக சினிமாவை விட்டு சற்று ஒதுங்கி இருப்பதும், அவ்வப்போது சமூகம் சார்ந்த விஷயங்களில் கருத்து தெரிவிப்பதும், அரசியல் பேசுவதுமாக இருந்து வருகிறார்.

ஒருவேளை பிரகாஷ்ராஜ் அரசியலுக்கு வரப்போகிறாரா என ரசிகர்கள் கேள்விகேட்ட நிலையில் இன்று புத்தாண்டு வாழ்த்து கூறிய பிரகாஷ்ராஜ் ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

அதாவது வரும் நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட உள்ளேன் என்று டுவிட்டரில் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார் நடிகர் பிரகாஷ்ராஜ்.