சினிமா

நடிகர் பிரபுதேவாவிற்கு ரகசியமாக திருமணம் முடிஞ்சாச்சா? மணப்பெண் இவரா? வெளியான ஷாக் தகவல்!

Summary:

நடிகர் பிரபுதேவா பிசியோதெரபி மருத்துவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியத் திரையுலகில் முன்னணி நடன இயக்குநர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டு விளங்குபவர் பிரபுதேவா. இவரது நடனத்திற்கெனவே ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.  இந்த நிலையில் அவர் தற்போது இந்தியில் சல்மான்கான் நடித்து வரும் ராதே என்ற படத்தை இயக்கி வருகிறார்.

பிரபுதேவா ரமலத் என்பவரைத் திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். இவர்களுக்கு 3 குழந்தைகள் இருந்தனர். அதில் மூத்த மகன் உடல்நிலை சரியில்லாமல் மரணமடைந்தார்.
இந்நிலையில் பிரபுதேவா சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் இரண்டாவதாக ரகசியத் திருமணம்  செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

பிரபுதேவாவை திருமணம் செய்துகொண்ட மணப்பெண் பீகாரை சேர்ந்தவர் எனவும், அவர் பிசியோதெரபி மருத்துவராக உள்ளார் எனவும் கூறப்படுகிறது. மேலும் சிகிச்சைக்காக பிரபுதேவா அவரிடம் சென்ற போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து பிரபுதேவா தரப்பிலிருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.


Advertisement