02 மணிநேரம் 55 ஓடும் சலார் திரைப்படம்: அசத்தல் அப்டேட்.. ரசிகர்கள் குஷி.!Prabhas Movie Rurnning Duration 

 

பிரபாஸ், பிரித்விராஜ் சுகுமாரன், சுருதி ஹாசன், ஜெகபதி பாபு, மீனாக்ஷி சௌதாரி, சரண் சக்தி, ஈஸ்வரி ராவ் உட்பட பலரின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சலார். கே.ஜி.எப் இரண்டு பாகங்களின் மாபெரும் வெற்றிக்கு பின்னர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் உருவாகியுள்ளது. 

ரவி பஸ்ரூர் இசையில், ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள சலார் திரைப்படம், உலகளவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் உட்பட பல மொழிகளில் டிசம்பர் 22 அன்று வெளியாகிறது. படத்தின் டிரைலர், டீசர் காட்சிகள் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்று இருந்தன.

இந்நிலையில், சலார் திரைப்படம் மொத்தமாக 2 மணிநேரம் 55 நிமிடங்கள் ஓடுகின்றன. இந்த படத்தின் முதல் பகுதி மட்டும் 1 மணிநேரம் 11 நிமிடங்கள் காட்சிகளை கொண்டுள்ளன. எஞ்சிய இரண்டாவது பகுதி 1 மணிநேரம் 43 நிமிடங்கள் கொண்டுள்ளன. 

இந்த தகவல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. அடிதடி, ஆக்சன், சூழ்ச்சி, வன்முறை என படத்தில் பல முக்கிய பகுதிகள் நிறைந்துள்ளதால், படத்தின் நேரமும் அதிகரித்து இருப்பதாக சினி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.