"பீம் சோட்டா பீம்".. பிரபாசின் "ஆதிபுருஷை" பைசா செலவில்லாமல் வச்சு செய்யும் நெட்டிசன்கள்..! நீங்களே பாருங்க..!! 

"பீம் சோட்டா பீம்".. பிரபாசின் "ஆதிபுருஷை" பைசா செலவில்லாமல் வச்சு செய்யும் நெட்டிசன்கள்..! நீங்களே பாருங்க..!! 


prabhas-adipurush-movie-trolls

இயக்குனர் ஓம் ராவுத் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடித்துள்ள திரைப்படம் ஆதிபுருஷ். இப்படம் டி-சீரீஸ் ப்ரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள நிலையில், ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் நேரடியாக வெளியாக இருக்கிறது. 

இப்படத்திற்கு 300 கோடி முதல் 500 கோடி வரை செலவிடப்படலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ரஜினிகாந்தின் கோச்சடையான் படம் போல 3டி அனிமேஷனில் உருவாக்கப்பட்டுள்ளது. 7000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இராமாயணத்தை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. 

இப்படத்தில் ராமராக பிராபாசும், சீதையாக கிருதி சனோனும் நடிக்கின்றனர். அத்துடன் 2023 ஜனவரி-12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகலாம் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வந்த நிலையில், நேற்று படத்தின் டீசர் வெளியானது.

கோடிக்கணக்கில் செலவிடப்பட்டு உருவாக்கப்படும் இப்படம் அனிமேஷன் படம் என்பதால் ரசிகர்கள் பலரும் பைசா செலவில்லாமல் கார்ட்டூன்களில் வரும் வீடியோக்களை போட்டு கலாய்க்க ஆரம்பித்துள்ளனர். அதிலும் அதிகமாக "பீம் பீம் சோட்டா பீம்" என்ற பாடலை வைத்துதான் கலாய்த்துள்ளனர். இது சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.