சினிமா

விஜய் டிவியின் முக்கிய பிரபலத்துடன் பூவையார் கொடுத்துள்ள போஸை பாருங்கள்! வைரலாகும் புகைப்படம்.

Summary:

Povaiyar kopinath

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் கப்பீஸ் என்கிற பூவையார். இவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆனால் கானா பாடல் பாடுவதில் வல்லவர்.

மேலும் இவர் தனது பேச்சாலும், பாடல்கள் மூலமும் மக்கள் மனதில் இடம் பிடித்து செல்ல பிள்ளையாக திகழ்ந்தவர். மேலும் சூப்பர் சிங்கர் சீசன் 6 ஜீனியர்களுக்கான போட்டியில் வெற்றி பெற்று மூன்றாம் இடத்தை வென்றுள்ளார்.

சமீபத்தில் கூட விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் ஒரு பாடலை அருமையாக பாடியுள்ளார். இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய் டிவி முக்கிய பிரபலமான தொகுப்பாளர் கோபிநாத் அவர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.


Advertisement