சினிமா

இயக்குனர் பா.ரஞ்சித் வீட்டில் இப்படி ஒரு சோகமா? அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்!

Summary:

Popular Director Pa Ranjith's father Pandurangan passes away

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் பா.ரஞ்சித். அட்டகத்தி திரைப்படம் மூலம் தமிழ் சினிமவில் இயக்குனர் அவதாரம் எடுத்த இவர் ஓரிரு படங்களிலையே சூப்பர் ஸ்டார் ரஜினியை இயக்கும் வாய்ப்பை பெற்றார்.

சூப்பர் ஸ்டாரை வைத்து கபாலி, காலா என இரண்டு வெற்றிப்படங்களை கொடுத்தார் இயக்குனர் ரஞ்சித். மேலும் இவரது இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் திரைப்படமும் மாபெரும் வெற்றிபெற்றது. இந்நிலையில் மேடை பேச்சுக்களில் அவ்வப்போது ஒருசில சர்ச்சை கருத்துக்களையும் பேசி விவாதத்திற்கு உள்ளானார்.

இந்நிலையில் இயக்குனர் ரஞ்சித்தின் தந்தை பாண்டுரங்கன் உடல்நல குறைவால் இன்று காலை 2 மணியளவில் இயற்கை எய்தினார். கடந்த சில நாட்களாக உடலனல குறைவால் அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இவர் இன்று மரணமடைந்தார்.

இன்று மாலை 5மணி அளவில் அவரது சொந்த ஊரான கர்லப்பாக்கத்தில் இறுதி ஊர்வலம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement