தேடி வந்துவிட்டது.. பிரபல பாடகி மற்றும் அவரது கணவருக்கு கொரோனா தொற்று உறுதி! அவரே வெளியிட்ட ஷாக் தகவல்!

தேடி வந்துவிட்டது.. பிரபல பாடகி மற்றும் அவரது கணவருக்கு கொரோனா தொற்று உறுதி! அவரே வெளியிட்ட ஷாக் தகவல்!


pop-singer-smita-and-her-husband-got-covid-19-positive

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் மூலமாக பாடகராக பிரபலமானவர் ஸ்மிதா. அதனை தொடர்ந்து அவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் பாப் பாடல்கள் மற்றும் திரைப்படங்களில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். மேலும் அவர் பல்வேறு ஆல்பங்ளிலும் பாடியுள்ளார்.

ஸ்மிதா பாடகராக மட்டுமின்றி மல்லீஸ்வரி, ஆட்டா போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் ஹைதராபாத்தை சேர்ந்த அவருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Coronovirus

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், நேற்று மிகவும்  மோசமான நாள். எனது உடலில் பயங்கரமான வலி ஏற்பட்டது. கடுமையான உடற்பயிற்சி செய்ததால் இந்த வலி  ஏற்பட்டிருக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் பாதுகாப்பு கருதி பரிசோதனை மேற்கொண்ட நிலையில், எனக்கும், எனது கணவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால் அறிகுறிகள் பெரிதாக இல்லை. கொரோனாவை விரட்டியடித்து பிளாஸ்மா தானம் செய்யஉள்ளோம். நாங்கள் பாதுகாப்பாக வீட்டில்தான் இருந்தோம். ஆனாலும் கொரோனா  எங்களை தேடி வந்துவிட்டது என தெரிவித்துள்ளார்.  இந்நிலையில் அவரது நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அவர்கள் இருவரும் பூரண குணமடைய வாழ்த்து  தெரிவித்துள்ளனர்.