திருமணம் அப்போதுதான்.. ஓப்பனாக போட்டுடைத்து நடிகை சதா சொன்ன விஷயம்.! ரசிகர்கள் ஷாக்!!
காதலில் விழுந்த பூவே பூச்சூடவா சீரியல் பிரபலங்கள்! விரைவில் திருமணம்! யார்னு பார்த்தீர்களா? செம சர்ப்ரைஸில் ரசிகர்கள்!

பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை ஒளிபரப்பாகி வரும் தொடர் ‘பூவே பூச்சூடவா’. இந்த தொடருக்கென ஏரளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலில் கதாநாயகியாக சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரேஷ்மா. டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற நடன நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த இவருக்கு இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
இதே சீரியலில் சுந்தர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்த நடிகர் மதன் . அவர் ஒருசில படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் ஒரே சீரியலில் நடித்துவரும் ரேஷ்மா மற்றும் மதன் இருவரும் காதலில் விழுந்துள்ளனர்.
இதுகுறித்து முதன்முறையாக மதன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் அவர், இந்த ஆண்டு எங்களுக்கு சிறந்த ஆண்டாக இருக்கும். இந்த நாளில் இதை பகிர்வதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என கூறி ரேஷ்மாவை திருமணம் செய்துகொள்ளவுள்ளது குறித்து தெரிவித்துள்ளார். மேலும் ரேஷ்மாவும் மகிழ்ச்சியுடன் ஆம் என்னுடைய கடைசி பெயரை மாற்ற போகிறேன் என்று அறிவித்துள்ளார். இந்நிலையில் ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.