என்னவொரு மனசு.. தளபதி படநாயகி பூஜா ஹெக்டே செய்த காரியம்! பாராட்டுக்களை தெறிக்கவிடும் ரசிகர்கள்!!

என்னவொரு மனசு.. தளபதி படநாயகி பூஜா ஹெக்டே செய்த காரியம்! பாராட்டுக்களை தெறிக்கவிடும் ரசிகர்கள்!!


pooja hegde help 100 family who affected by corono lockdown

தமிழ் சினிமாவில் மிஸ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளிவந்த முகமூடி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம்  அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. பூஜாஹெக்டே தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மேலும் நடிகை பூஜா ஹெக்டே தற்போது தமிழில் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் விஜய் நடிக்கவுள்ள தளபதி 65 திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.  இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் இரண்டாவது அலையாக அதிதீவிரமாக பரவி வரும் நிலையில், கொரோனோ பரவலை கட்டுபடுத்த நாடுமுழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

Pooja hegde

இந்நிலையில் உணவின்றி தவிக்கும் பலருக்கும் தன்னார்வலர்களும், திரைப்பிரபலங்களும் ஏராளமான உதவிகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகை பூஜா ஹெக்டேவும் ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு உதவ முன் வந்துள்ளார். அவர் ஒரு மாதத்திற்கு தேவையான ரேசன் பொருட்களை கஷ்டப்படும் 100 குடும்பத்தினருக்கு வழங்க ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூவலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.