அடேங்கப்பா... வேற லெவல்... மிக பிரமாண்டமாக வெளியான பொன்னியின் செல்வன் டீசர்...

அடேங்கப்பா... வேற லெவல்... மிக பிரமாண்டமாக வெளியான பொன்னியின் செல்வன் டீசர்...



Ponniyin Selvan teaser released

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான மணிரத்னம் தற்போது தனது கனவு படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, அமிதாப் பச்சன், சரத்குமார், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், விக்ரம் பிரபு, லால், பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி என பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் தயாராகி வரும்  இப்படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். ரூ800 கோடி செலவில் பிரம்மாண்டமாக உருவாகும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் இப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் வருகின்ற செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தற்போது இப்படத்தின் டீஸர் மிக பிரமாண்டமாக வெளியாகியுள்ளது. படத்தின் டீஸர் வெளியானது முதல் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகுந்து காணப்படுகிறது.