அட்ராசக்க.. பொன்னியின் செல்வனின் ஒருநாள் வசூல் மட்டும் இத்தனை கோடியா?.. சாதனை படைத்ததா வீரசோழம்?..!!

அட்ராசக்க.. பொன்னியின் செல்வனின் ஒருநாள் வசூல் மட்டும் இத்தனை கோடியா?.. சாதனை படைத்ததா வீரசோழம்?..!!


Ponniyin Selvan Profit First day Report

 

கல்கி கிருஷ்ணமூர்த்தியின் நாவலை தழுவி, பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட வரலாற்று திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படத்தை இயக்குனர் மணிரத்தினம் இயக்கியிருந்த நிலையில், விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, ஆர். சரத்குமார், விக்ரம் பிரபு, பார்த்திபன், ஜெயராம் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வனின் முதல் பாகம் நேற்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையிடப்பட்டது. மாபெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளிலும் நேரடியாக வெளியிடப்பட்டது.

ponniyin selvan

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் திரையிடப்பட்ட படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பு கிடைத்திருந்தது. டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில மணிநேரத்திலேயே இரண்டு வாரங்களுக்கான டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டு சாதனையும் படைத்துள்ளது. 

அத்துடன் உலகம் முழுவதுமுள்ள 5000-ற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பொன்னியின் செல்வன் முதல் நாளிலேயே அதிக வசூல் செய்த படங்கள் பட்டியலில் மூன்றாம் இடம்பிடித்துள்ளது. அதன்படி இப்படம் முதல்நாள் மட்டும் ரூ.75 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. 

ponniyin selvan

இப்படம் தமிழகத்தில் ரூ.25 கோடிக்குமேல் வசூலித்ததாகவும், இந்திய அளவில் ரூ.42 கோடி வசூல் என்றும், இந்தி மொழியாக்கத்தில் ரூ.15 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தயாரிப்பு நிறுவனம் சார்பில் பொன்னியின் செல்வன் ரூ.80 கொடி வசூல் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.