"என்கிட்ட அந்த விஷயம் அழகா இல்லன்னு என் முகத்துக்கு நேராவே சொன்னாங்க" பொன்னியின் செல்வன் ஷோபிதா மனமுடைந்த பேட்டி..Ponniyin selvan actress viral interview

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் மணிரத்தினம். இவர் 80களில் தொடங்கி தற்போது வரை தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களை இயக்கி வருகிறார். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் மிகப் பெரும் ஹிட்டாகியது முதல் மற்றும் இரண்டாம் பாகம் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை அளித்து வந்தது.

Obitha

இப்படத்தில் நடிகை சோபிதா, வானதி எனும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றார். இது போன்ற நிலையில தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை சோபிதா காதலித்து வருவதாக சினிமா துறையில் கிசுகிசுக்கப்பட்டு வந்தது.

இதற்கு பதிலளித்த நடிகை சோபிதா "அறிவில்லாமல் கண்டவர்கள் பேசுவதற்கெல்லாம் பதிலளித்துக் கொண்டிருப்பதற்கு நேரமில்லை. நான் எந்த தவறும் செய்யவில்லை என்பது எனக்கு தெரியும். மற்றவர்களுக்கு நான் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை" என்று பதிலடி கொடுத்தார்.

Obitha

மிஸ் இந்தியா பட்டம் வென்றிருக்கும் நடிகை சோபிதா தன் ஆரம்ப காலகட்டத்தில் சினிமா துறையில் தன்னை அழகாக இல்லை, வெள்ளையாக இல்லை போன்ற உடல் தோற்றங்களை கேலி செய்யும் விதமாக கமெண்ட் செய்து நிராகரித்தனர் என்று மனமுடைந்து பேசியிருந்தார்.