சினிமா

நடிகர் பொன்னம்பலம் மருத்துவமனையில் திடீர் அனுமதி! ஓடிவந்து உதவிய நடிகர் கமல்! வைரலாகும் ஷாக் வீடியோ!

Summary:

Ponnampalam admit in hospital for kidney problem

தமிழ் சினிமாவில் ஏராளமான  திரைப்படங்களில் நடித்து முன்னணி வில்லன் நடிகராக கொடிகட்டி பறந்தவர் நடிகர் பொன்னம்பலம். இவர் 1988 ஆம் ஆண்டு,  வெளிவந்த கலியுகம் என்ற படத்தில், ஜெயில் கைதியாக நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து ரஜினி, கமல், சத்யராஜ், விஜயகாந்த், சரத்குமார் என பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் கொடூர வில்லனாக நடித்துள்ளார். 

பின்னர் கடந்த சில ஆண்டுகளாக பட வாய்ப்புகள் எதுவுமின்றி இருந்துவந்த நடிகர் பொன்னம்பலம் விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல் தொகுத்து வழங்கிய தனியார் பிக்பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்டார். 

இந்நிலையில் தற்போது  நடிகர் பொன்னம்பலம் சிறுநீரக கோளாறு காரணமாக சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். அவரின் சிகிச்சைக்கு நடிகர் கமல் உதவி வருகிறார். மேலும் அவர் தினமும் தொலைபேசி மூலம் பொன்னம்பலத்தைத் தொடர்புகொண்டு நலம் விசாரித்து வருகிறார். அதுமட்டுமின்றி அவரது  இரண்டு குழந்தைகளின் கல்விச் செலவையும் நடிகர் கமலே ஏற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

மேலும் நடிகர் பொன்னம்பலம்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை கண்ட ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வேண்டுமென பிரார்த்தனை மேற்கொள்கின்றனர்.


Advertisement