தமிழகம் சினிமா

நடிகர் பொன்னம்பலத்திற்கு சிகிச்சைக்காக ரசிகர்கள் எவ்வளவு பணம் அனுப்பியுள்ளனர் தெரியுமா? ரசிகர்களை தெய்வம் என கூறிய பொன்னம்பலம்!

Summary:

ponnambalam talk about fans

தமிழ் சினிமாவில் ஏராளமான  திரைப்படங்களில் நடித்து முன்னணி வில்லன் நடிகராக கொடிகட்டி பறந்தவர் நடிகர் பொன்னம்பலம். இவர் ரஜினி, கமல், சத்யராஜ், விஜயகாந்த், சரத்குமார் என பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் கொடூர வில்லனாக நடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக பட வாய்ப்புகள் எதுவுமின்றி இருந்துவந்த நடிகர் பொன்னம்பலம் விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல் தொகுத்து வழங்கிய தனியார் பிக்பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்டார். 

இந்நிலையில் தற்போது  நடிகர் பொன்னம்பலம் சிறுநீரக கோளாறு காரணமாக சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். கமல் சார் மற்றும் ரஜினி சார் இருவரும் என்னிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்ததாக பொன்னம்பலம் வீடியோ ஒன்றில் கூறியிருந்தார். மேலும், கமல் சார் தனது குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்றுக்கொண்டதாகவும், ரஜினி சார் தனது மருத்துவச்செலவை ஏற்றுக்கொண்டதாகவும் அவர் கூறுயிருந்தார். 

மேலும், அவருடைய சிகிச்சைக்கு திரைப்பிரபலங்கள் பலரும் உதவினர். அதுமட்டுமின்றி ரசிகர்கள் பலரும் தங்களால் இயன்ற பணத்தை அவருடைய வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தனர். தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ள பொன்னம்பலம், இந்த இக்கட்டான சூழலில், ஸ்டண்ட் யூனியன் தன்னைக் கைவிட்டு விட்டதாகவும் ரசிகர்களும் சக கலைஞர்களும் தான் உதவி செய்துள்ளனர் என்றும் உருக்கமுடன் கூறியுள்ளார்.

தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ள பொன்னம்பலம் அர்ஜூன், சரத்குமார், தனுஷ் எல்லாரும் எனக்கு உதவி செய்தார்கள். என்னோட ரசிகர்கள் என்னோட கஷ்டத்தைத் தெரிஞ்சிகிட்டு 100, 50 என்று ஒரு லட்சத்திற்கும் மேல எனது வங்கி கணக்கில் டெபாசிட் செய்துள்ளார்கள். அவங்கதான் எனக்கு தெய்வம் என தெரிவித்துள்ளார்.


Advertisement