சினிமா

நேர்கொண்ட பார்வை படைத்த மாபெரும் சாதனை.! உற்சாகத்தில் பிரபல நடிகையின் கணவர் எடுத்த அதிரடி முடிவு!!

Summary:

ponikapoor going to remake bollywood movie

பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிங்க். இந்தப் படத்தை இயக்குனர் வினோத் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார்.

மேலும் இந்தப் படத்தில் அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரை எதிர்த்து வாதிடும் வழக்கறிஞராக ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி  கொடுத்துள்ளார் வித்யாபாலன். மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பாலிவுட்டில் மாபெரும் வெற்றியை பெற்ற இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்துள்ளார். மேலும் இப்படத்தை தொடர்ந்து மீண்டும் போனிகபூருடன் இணைத்து புதிய படத்தில் நடிக்கவுள்ளார் தல அஜித். இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 29 ல் தொடங்கவுள்ளது என தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் நேற்று நேர்கொண்ட பார்வை உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் வசூல் சாதனையும் குவிகிறது. இந்த நிலையில் இத்தகைய பெரும் சாதனையை தொடர்ந்து போனிகபூர் புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அதாவது பதாய் ஹோ, ஆர்ட்டிக்கிள் 15 ஆகிய இரு ஹிந்தி படங்களை தமிழில் ரீமேக் செய்ய முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


 


Advertisement--!>